ஒன்றும் இல்லாததை பெரிதுபடுத்துபவர் சுப்பிரமணியசாமி...! தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jun 12, 2022, 1:49 PM IST
Highlights

 நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையை கண்டித்து சென்னை அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை கண்டிக்கும் வகையில் நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையிலையில் சென்னை ராயப்பேட்டை தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலப்பிரிவு மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்.  பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அமலாக்கத்துறை ராகுல் காந்தி  மற்றும் சோனியா காந்தியை  விசாரணைக்கு அழைத்து உள்ளார்கள் , தங்களது கருத்துக்கு மாறாக உள்ளவர்களை விசாரணைக்கு அழைப்பது இந்த உலகில் புதியது இல்லை என்றும் அன்றைய மொரார்ஜி தேசாய் அரசாங்கம் இந்திரா காந்தி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். எனவே  மோடி சர்வாதிகார ஆட்சியை முறியடித்து ராகுல் காந்தி நட்சத்திரமாக திகழ்வார் என கூறினார்.  அமலாக்கத்துறை பிரதமர் மோடியிடம் சென்றுவிட்டது என்றும்  விசாரணை என்ற பெயரில் மக்கள் மத்தியில் இழுக்கை ஏற்படுத்துகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

Latest Videos

நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தூய்மையாக இருக்கிறது என்றும் அமலாக்கத்துறையில்,நாளை ராகுல் காந்தி ஆஜராகும் நேரத்தில் அனைத்து மாநில அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலை அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் முன்பு  ஆயிரம் கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் ஜவஹர்லால் நேரு என்றும் இதனையடுத்து உருது மற்றும் இந்தி மொழியிலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளி வந்ததாகவும், நேஷனல் ஹெரால்டு  பங்குகளை காங்கிரஸ் கட்சி வைத்து கொள்ள முடியாது அதனால் யங் இந்தியன் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு காங்கிரஸ் கட்சிக்காக தொடங்கப்பட்ட ஒரு பத்திரிக்கையில் நஷ்டம் ஏற்பட்டதால் சிறிது காலம் மூடப்பட்டது மீண்டும் நேருவின் மனைவி நகையை அடகுவைத்து நேரு மீண்டும் அந்த பத்திரிகையை தொடங்கினார் என்று கூறினார்.பங்கு பரிவர்த்தனை அனைத்தும் சட்டபூர்வமாக பத்திரப்பதிவு மூலம் நடைபெற்றது. பரிவர்த்தனையில் ஒரு நயா பைசா கூட பணமாக கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அமலாக்கத்துறை விசாரணை தேவையில்லாதது என கூறினார்.

இல்லாததை பெரிதுபடுத்துபவர் சுப்பிரமணியசாமி

 சுப்பிரமணியசாமி இல்லாத பிரச்சினைகளை பெரிது படுத்துபவர் என்றும் காங்கிரஸ் 100 ஆண்டுகால கட்சி, அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து நிற்கும் என தெரிவித்தவர், மோடி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது அவர்களின் பொருளாதார கொள்கைகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும்  மோடி அரசாங்கத்தின் தொழில் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே இந்திய ரயில்வே என்றும் அதை தனியாருக்கு தாரை வார்க்கிறது மோடி அரசாங்கம் என்றும் குற்றம் சாட்டினார்.
 உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது அதை மூடி மறைத்து விட்டார்கள் எனவும் மோடி அரசு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை மறைப்பதற்கு இது போன்ற பிரச்சினைகளை கொண்டு வந்து பாஜக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல..! ஆர்.எஸ்.எஸின் ப்ராடக்ட் தான் ஆர்.என்.ரவி..! திருமாவளவன் விளாசல்

click me!