TNPSC தற்காலிக தலைவர் அறிவிப்பு.. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.முனியநாதன் நியமனம்..

By Thanalakshmi VFirst Published Jun 12, 2022, 1:11 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த அருள்மொழி ஐ.ஏ.எஸ். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் அவர் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைவராக சி.முனியநாதன் என்பவர் நியமனம செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். மேலும் ஆதிதிராவிட நலத் துறை ஆணையர், தொழிலாளர் நலத் துறை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  

இதனிடையே டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் பணி ஓய்வு பெற்ற பின், ஏற்கனவே உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம்,  முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு கைகள் இருக்காதா.? கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் எங்களுக்கும் தெரியும்.. திமுகவுக்கு பாஜக பதிலடி!

click me!