இப்படி செல்ஃபி தேவையா... டால்பின் நோஸ் பாறையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

By SG Balan  |  First Published Mar 31, 2024, 7:53 PM IST

சுற்றுலா வந்த தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் வட்டாகானல் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது இங்குள்ள ஆபத்தான பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க சென்ற இளைஞர் கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தார். 


கொடைக்கானல் வட்டக்கானல் டால்பின் நோஸ் பகுதி மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்தப் பகுதியில் உள்ள 100 அடி பள்ளத்தில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்திருக்கிறார். நல்வாய்ப்பாக அருகில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் டால்பின் நோஸ் என்னும் சுற்றுலா தளம் உள்ளது. இந்த நிலையில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் இன்று நண்பகல் வேளையில் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று சுற்றுலா வந்த நிலையில் இன்று வட்டாகானல் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர்.

வருமான வரித்துறை ரூ.6,329 கோடி தரணும்! ஆர்டர்களைக் காட்டும் இன்போசிஸ் நிறுவனம்!

அப்போது இங்குள்ள ஆபத்தான பாறையின் அருகே செல்ஃபி எடுக்க சென்ற இளைஞர் கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அதன் பிறகு உடன் வந்தவர்கள் அவரை மீட்டு மேல் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் வட்டக்கானலுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சுற்றுலா வரும் இளைஞர்கள் இது போல ஆபத்தான பகுதிக்கு சென்று தவறி விழுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த சுற்றுலப்தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கச்சத்தீவு பிரச்சினை கிளப்பிய பாஜக பூஜ்ஜியம் வாங்கப்போவது உறுதி: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

click me!