திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தி வருகிறார்.
அந்த வகையில், மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாட்டையொட்டி, திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழு இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை தொடங்கியுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து இளைஞரணி மாநாட்டுக்கான அலோசனைக் கூட்டங்களையும் உதயநிதி நடத்தி வருகிறார்.
undefined
திமுகவின் இளைஞரணி செயலாளராக சுமார் 35 ஆண்டுகள் ஸ்டாலின் பணியாற்றியுள்ளார். அப்போது திமுகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு, டிசம்பர் 17ஆம் தேதிதான் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவை ஆட்டிப்படைக்கும் ரெய்டுகள், உட்கட்சி பூசல்: தேர்தல் பணிகளில் சுணக்கம்!
இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆ,லோசிக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி மாநாடு, பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநாடாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “கூட்டணியை, தொகுதி பங்கீட்டை தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ, அவரே நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இருப்பார். இவர்தான் இந்த தொகுதிக்கு என்ற உறுதி எதுவுமில்லை.” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.