கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தோஷ், தமிழன்பன், நரேஷ் யஷ்வந்த் என்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிக்னல் கொடுக்காமல் லாரி திடீரென சாலையோரம் திரும்பியதால் பின்னால் வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.