விஜயகாந்திற்கு உடல்நிலை எப்படி இருக்கு..? எப்போது வீடு திரும்புவார்.? மருத்துவமனை நிர்வாகம் தகவல்

By Ajmal Khan  |  First Published Nov 26, 2023, 1:15 PM IST

நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 


அரசியல் தலைவர்களை அலற விட்ட விஜயகாந்த்

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்று கட்சியாக தேமுதிகவை உருவாக்கி அரசியல் தலைவர்களை அலறவிட்டவர் விஜயகாந்த், மக்களுடனும் தெய்வத்தோடும் தான் கூட்டணி என அறிவித்து அவர் மேற்கொண்ட பிரச்சராம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாகவே வாக்கு சதவிகிதமும் பல மடங்கு அதிகரித்தது. இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார்.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் ஏற்பட்டது.அதே நேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலையும் பின் தங்கியது. இதன் காரணமாக தொண்டர்களை அடிக்கடி சந்தித்து வந்த விஜயகாந்த வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை

இதனையடுத்து தேமுதிகவை விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், அவரது தம்பி சுதீசும் கையில் எடுத்தனர். ஆனால் வெற்றியானது கிடைக்கவில்லை. தேர்தல்களில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. விஜயகாந்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தநிலையில் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 18ஆம் தேதி முதல் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவல் தெரிவித்துள்ளது.  

இதையும் படியுங்கள்

இனி எக்காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குதான்! அது மட்டும் நடந்துச்சுன்னா நாம் கைகாட்டுபவரே பிரதமர்! முதல்வர்

click me!