School Reopen: இனி ஜாலி தான்.. மழலையர் பள்ளி திறப்பு..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

Published : Mar 11, 2022, 09:04 PM IST
School Reopen:  இனி ஜாலி தான்.. மழலையர் பள்ளி திறப்பு..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

சுருக்கம்

School Reopen: புதுச்சேரியில் மார்ச் 14 ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பள்ளிகள் ஐனவரி 10 முதல் காலவரையின்றி மூட்பட்டன. மேலும் கொரோனா பரவல் தீவரமடைந்த நிலையில் 10 ஆம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

மேலும் படிக்க: CBSE Class 10, 12 Board Exam:மாணவர்கள் கவனத்திற்கு..சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

இதனிடையே கொரோனா பாதிப்பு நன்கு குறைய தொடங்கியதால்,  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நர்சரி வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்காமல் இருந்தது.இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் வரும் திங்கள்கிழமை முதல் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி, நர்சரி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விவசாயிகளுக்கு குட்நியூஸ்... 2 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வெல்லப்போது யார்? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் பயிலும் பள்ளிகளை வருகிற 14.03.2022 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வருகிற திங்கள்கிழமை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தெரிவித்தார்.

இதையும் படிக்க: பிரதமர் மோடி ஆட்சிக்கு பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது… தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!!

இந்நிலையில் மழலையர் பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 148 பாலசேவிகா பணியாளர்களுக்கு பணியானை வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!