கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ.. வானை முட்டுமளவு புகைமண்டலம்.. இரண்டு நாளாக போராடும் வனத்துறை..

Published : Mar 11, 2022, 04:14 PM IST
கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ.. வானை முட்டுமளவு புகைமண்டலம்.. இரண்டு நாளாக போராடும் வனத்துறை..

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. பழமையான மற்றும் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.      

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகள் , பழமையான மரங்களும் நிரம்பி காணப்படுகின்றன. இப்பகுதியானது மேற்குதொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் நிலவும் இதமான வானிலை காரணமாக  சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய கோடை காலங்களில், அதிக வெப்பத்தின் தாக்கத்தினால், வனப்பகுதிகளில் திடீரென தீ விபத்து ஏற்படுவது தற்போது அதிகரித்துள்ளது. 

பெருமாள்மலையில் இரண்டாவது நாளாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மேலும் காட்டுத்தீயினால் அரிய வகை மரங்கள், மூலிகைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. இப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, மெல்ல மெல்லப் பரவி குடியிருப்பு பகுதிகள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் பரவி வருகிறது. மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்க தியிணைப்பு துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நள்ளிரவு முதல் தீத்தடுப்பு எல்லைகள் அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகள் அமைத்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பெருமாள் மலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீ, தற்போது வரையிலும் தொடர்ந்து வருகிறது. இதனால், பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் கருகி வருகின்றன. இதனால், தொடர்ந்து மளமளவென எரிந்து வரும் காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. தோகை வரை, மயிலாடும் பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!