வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் திருநாள் - பண்பாட்டுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மக்களிசை மாண்பாளர் பட்டம் வழங்கப்பட்டது.
தி.கவின் பண்பாட்டு திருவிழா
சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் திருநாள் - பண்பாட்டுத் திருவிழா நிகழ்ச்சியானது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேதமற்ற மாட்டுப் பொங்கலாக எருமை மாட்டுக்கும் சேர்த்து பொங்கல் வைக்கப்பட்டதோடு, இசை நிகழ்ச்சிகள், மயிலாட்டம், சிலம்பாட்டம், உறியடி போன்றவையும் பொங்கல் விழா கொண்டாட்டமாக நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, சிந்திக்க சொன்னவர் பெரியார் என்கிற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, மக்களிசை மாண்பாளர் என்கிற பட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
பைத்தியக்காரர்களுக்கு புரியாது
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், பலருக்கும் திராவிடம் என்றால் புரியவில்லை. திராவிடம் என்றால் பைத்தியக்காரர்களுக்கு புரியாது. தெளிவாக இருப்பவர்களுக்குரான் புரியும். பைத்தியக்காரர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது. பைத்தியக்காரர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர பதில் அல்ல. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய போது, யாருக்கும் அடிமையில்லை என்பதை கூறினார். திராவிடர் கழகம் என்பது இயக்கம் கட்சி அல்ல. தான் கட்சிக்காரனாக இருந்ததில்லை கொள்கைக்காரனாகவே இருந்துள்ளேன் என பெரியார் கூறுவார். கொள்கை உறவு ரத்த உறவைவிட
ஜோசியம் என்பது போலி விஞ்ஞானம்
ஜோசியம்தான் அனைவரையும் படாதபாடு படுத்துகிறது. நன்றாக நடிக்கும் நடிகர்கள் எல்லாம் நாசமாக போவது ஜோசியத்தால்தான். ஜோசியம் புரட்டு என்பதை பெரியார் முன்னாடியே கூறி இருந்தார். ஜோசியம் உண்மையாக இருந்தால் அதனை உண்மையில் முதலாவதாக ஆதரிப்பது பகுத்தறிவாளர்கள்தான். ஜோசியம் என்பது போலி விஞ்ஞானம். அறிவியலுக்கு பதிலாக போலி விஞ்ஞானத்தை பயன்படுத்துகின்றனர். அப்படியென்றாக் ஜோசியக்காரர்களை டிராபிக் ஆணையராக போட்டுவிடலாம்.
எந்த கொம்பனாலும் தொட முடியாது
சாமியார் ஆவதற்கு என்ன தேவையாக உள்ளது. சட்டையை கழற்றினால் அரை நிர்வான சாமியாராகவும், முழுவதுமாக அகற்றினால் கோமண சாமியாராகவும், உடையே அணியவில்லை என்றால் கும்பமேளா சாமியார் என்பதுதான் சாமியார் ஆவதற்கான தகுதி. தகுதியும் திறமையும் பிறப்பினால் கிடையாது என்பதை மக்களுக்கு புரியும் வரையில் பெரியார் பேசினார்.
பெரியாரை எந்தக் கொம்பனாலும் தொட்டுவிட முடியாது பெரியார் என்ன செய்தார் என்று கேட்பதைவிட என்ன செய்யவில்லை என்று கேளுங்கள். சாமி கும்பிட சென்றாலும், பாஜகவிற்கு தலைவர் தேர்ந்தெடுத்தாலும் அங்கு பெரியார் இருப்பார். தமிழ்நாட்டில் 'அவா'க்களை தேர்ந்தெடுக்க முடியாது. ஏனென்றால் பெரியார் ஊட்டிய சமூகநீதிதான் காரணம் கி.வீரமணி தெரிவித்தார்.