தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போடுவதால் உங்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? குஷ்பு சர்ச்சை பேச்சு

By Velmurugan s  |  First Published Mar 12, 2024, 4:59 AM IST

பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் திமுக மாதம் ரூபாய் ஆயிரம் பிச்சை போடுவதால் உங்களுக்கு அவர்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா என பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை செங்குன்றம் பகுதியில் பாஜக சார்பில் போதைப் பொருள் ஒழிப்புக்கான ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்குக் கூட போதைப் பொருள் எளிதாக கிடைக்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தற்போது ஜாபர் சாதிக் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் அவர் தொடர்புடைய இடங்களில் இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நபரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். இனி எங்களுக்கும், இதற்கும் தொடர்பில்லை என்று முதல்வர் கூற முடியாது. இதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்.

தற்போது வரை காமராஜரின் பெயரை சொல்லி காங்கிரஸ் பிச்சை எடுக்கிறது - குஷ்பு அதிரடி கருத்து

தாய்மார்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் உங்களுக்கு வாக்களித்துவிடுவார்களா? இதற்கு பதிலாக நீங்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று தெரிவித்தார். அதே உறுதி மொழியை அளித்து தான் ஸ்டாலினும் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது அமைச்சர் உதயநிதியும் அதே கருத்தை தான் சொல்கிறார். ஆனால் டாஸ்மாக் குறைந்ததாக தெரியவில்லை. வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்களின் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.

பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்; கூட்டணியை உறுதி செய்தார் டிடிவி தினகரன்

டாஸ்மாக் பிரச்சினையை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று பார்த்தால் அதற்குள் போதைப்பொருள் பிரச்சினை வந்து விட்டது. தற்போது திமுக இல்லாமல் வேறு ஏதேனும் கட்சி ஆட்சியில் இருந்திருக்கும் பட்சத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வீதி வீதியாக சென்று முதல்வர் பதவி விலக வேண்டும், பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தியிருக்கும். அதே போன்று ராகுல் காந்தியும் போராட்டம் என்ற பெயரில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் தப்பு தப்பாக பேசியிருப்பார்.

9 சீட் வேண்டும் என்ற நப்பாசையில் காங்கிரஸ் எதுவும் பேசாமல் உள்ளது. விசிக உட்பட திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்த கட்சியுமே தற்போது வரை இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கும் போதைப் பொருள் கடத்தலில் பங்கு இருக்கிறது என்று தான் அர்த்தம் என்றார்.

click me!