மமங் தாய் எழுதிய The Black Hill (2014) என்ற ஆங்கில நாவலை 'கருங்குன்றம்' (2016) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தமைக்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மமங் தாய் எழுதிய நூலின் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எழுதிய படைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக 1954ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு இலக்கியத்திற்காக அளிக்கும் உயரிய விருதான இந்த விருது மொழிபெயர்ப்புக்கும் தனியாக வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளித்து கவுரவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த ஆண்டுக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மமங் தாய் எழுதிய The Black Hill (2014) என்ற ஆங்கில நாவலை 'கருங்குன்றம்' (2016) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தமைக்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 1857, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி, புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.
The Black Hill நாவல் ஆங்கிலத்தில் வெளியான அடுத்த வருடம், ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.