Kesava Vinayagam : விசாரணைக்கு போலீஸ் கூப்பிடுறாங்க.. சம்மனுக்கு தடை விதியுங்க- நீதிமன்ற படி ஏறிய கேசவவிநாயகம்

By Ajmal Khan  |  First Published May 22, 2024, 11:04 AM IST

நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திற்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், சம்மனுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனு தாக்கல் செய்துள்ளார்.


ரயிலில் 4 கோடி பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்பட்டது. இந்த பணம் விவகாரம் தொடர்பாக போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் நயினார் நாகேந்தரின் கால அவகாசம் கேட்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து பணத்தை கொண்டு சென்ற நபர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாஜக மூத்த நிர்வாகி சேகரின் வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விசாரித்துள்ளனர்.  இந்தநிலையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் தொடர்பாக தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு போலீசார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Savukku : சவுக்கு சங்கரின் குழுவை இயக்கியதே அண்ணாமலை தான்.!! டிஜிபிக்கு பறந்த புகார் கடிதத்தால் பரபரப்பு

கேசவவிநாயகம் நீதிமன்றத்தில் மனு

இந்தநிலையில் தமிழக பா.ஜ. க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு  ஆஜராகும் படி தனக்கு சம்மன் அனுப்ப பட்டதாகவும், இந்த சம்மனை  ரத்து செய்து, வழக்கின் விசாரணை தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள கேசவ விநாயகம், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது எனவும் கேசவ விநாயகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிபதி சரவணன் முன் வர உள்ளது.

IRFAN : மன்னிப்பு கேட்ட இர்பான்.!! நடவடிக்கை எடுப்பது உறுதி என அறிவித்த மருத்துவ குழு

click me!