கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் கடும் வெப்பம் மற்றும் ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் வந்ததால் டன் கணக்கில் இறந்து கிடக்கும் மீன்கள் - ஒரு வாரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் மழைநீருடன், அங்குள்ள சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த தொழிற்சாலை கழிவு நீருடன் சேர்ந்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன், நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்தது.
வைகாசி விசாகப் பெருவிழா; பழனி திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டதால், இந்த நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்து சேர்ந்தது. இந்த ரசாயனம் கலந்த தண்ணீரால், அணையின் மேல் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் மிகவும் கவலையடைந்தனர். இந்நிலையில் இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரை நகர்ந்து வந்ததால், 2 கிலோ எடை வரை உள்ள 7 டன் மீன்கள் செத்து மிதந்தன.
IRFAN : மன்னிப்பு கேட்ட இர்பான்.!! நடவடிக்கை எடுப்பது உறுதி என அறிவித்த மருத்துவ குழு
இதனால் அணைப் பகுதியில் நிற்க முடியாத அளவிற்கு மிகவும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கும் பகுதியில் பச்சை நிறத்தில் சேறு கலந்தவாறு தண்ணீர் மாறியுள்ளது. டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் பெரும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.