
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் இந்ளு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அவர்அ றிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒ.என்.ஜி.சி நிறுவனம், எரிவாயு எடுத்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு எரிவாயு இல்லை என எரிவாயு எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தினர்,. திடீரென ராட்சத இயந்திரங்கள், குழாய்களை கொண்டுவந்து இறக்கினர்.
இது ஹைடோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சி என பொதுமக்களும், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினரும் கடந்த 19 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பணிகள் எதுவும் நடக்காது என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் ஆயிரக்கணக்கான போலீசார் உதவியுடன் புதிய குழாய்களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர்.போராட்டத்தின் போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பேச்ச வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிராம மக்கள் அறிவித்துள்ளனர்