ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது ஏன்.? தூண்டியது யார்.? பரபரப்பு வாக்குமூலம் அளித்த கருக்கா வினோத்

By Ajmal Khan  |  First Published Oct 31, 2023, 10:27 AM IST

 நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் ஆளுநர் மாளிகை முன்பு  பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார்.


ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழக ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதி பாதுகாப்பு வளையத்தில் எந்த நேரமும் இருக்கும், இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நாடு முழுவதும் தமிழகத்தின் மேல் பார்வை பதிந்தது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு பெட்ரோல் குண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியது. மேலும் ஆளுநர் மாளிகையும் பாதுகாப்பு குறைபாடு என குற்றம்சாட்டியது.

கருக்கா வினோத்திற்கு போலீஸ் காவல்

இந்தநிலையில் கருக்க வினோத்தை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் ஏற்கனவே இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று சைதாப்பேட்டை நீதிமன்ற்த்தில் கருக்கா வினோத்தை ஆஜர் செய்த போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற நீதிபதி 3 நாட்கள் காவலுக்கு ஒப்புதல் அளித்தனர்.

இதனையடுத்து ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக  கருக்கா வினோத்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

கருக்கா வினோத் வாக்குமூலம்

மேலும்  நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் ஆளுநர் மாளிகை முன்பு  பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். மேலும் மேலும்  10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதற்காவும் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியதை தான் தனிப்பட்ட முறையில் தான் மேற்கொண்டதாகவும், பிஎப்ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை என கூறினார். சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை என்றும் கருக்கா வினோத் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் ரவிக்கு எதிராக களத்தில் இறங்கிய தமிழக அரசு.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதிரடி
 

click me!