வேலூர் மாவட்டத்தில் பல்வேறு எருதுவிடும் போட்டியில் முதல் பரிசு வென்ற காலை மர்ம நபர் வெட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் பவானி எக்ஸ்பிரஸ் என்ற காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளை மாடு சுற்றுவட்டார மாவட்டங்களிலும், வெளிமாநிலங்களிலும் நடக்கும் எருது விடும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் நடந்த எருது விடும் விழாவில் முதல் பரிசும் மற்றும் இரண்டாவது பரிசும் வென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று சிவா வளர்த்து வந்த காளை மாடு நிலத்தில் கட்டி வைத்துவிட்டு விடியற்காலை எழுந்து பார்த்தபோது காளை மாட்டை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். காலை வழக்கம் போல் நிலத்தில் கட்டி வைத்த காளை மாட்டை பார்ப்பதற்காக சிவா சென்றபோது ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டிருந்த காளை மாட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உடனடியாக பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாட்டை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளை மாட்டின் கால் பகுதியை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு எருது விடும் திருவிழாவில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்ற பவானி எக்ஸ்பிரஸ் காளை மாட்டின் காலை மர்ம நபர் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.