தேவையில்லாத வேலை..நேரம் பார்த்துதான் பதவி ஏத்துக்குறாங்க.. தருமபுரி செந்திலை டரியல் ஆக்கிய கார்த்தி சிதம்பரம்

By Ajmal Khan  |  First Published Jul 18, 2022, 4:31 PM IST

அரசு திட்ட துவக்க விழாவில் பூஜை செய்ததை தர்மபுரி திமுக  எம்.பி.செந்தில்குமார் தடுத்து நிறுத்தியது தேவையற்ற சர்ச்சை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் காலம் காலமாக நடந்து வரக்கூடிய பிரச்சினை தான். தற்போது தான் கூச்சத்தை விட்டு வெளியே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க கவுன்சிலர்கள் வேண்டும். மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தயக்கம் இன்றி வெளிப்படையாக சொல்லக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.வரக்கூடிய புதிய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாகவும் இருக்கக்கூடிய கோரிக்கை என கூறினார்.

Tap to resize

Latest Videos

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம்..! தந்தையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

கரி நாளில் பதவி ஏற்பது இல்லை

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமலாக்கத்துறையில் வல்லுனர் நான்தான் தமிழகத்துறை விசாரணைக்கு அழைத்து எவ்வளவு மணி நேரம் வீணடிக்கிறார்கள் என்பதற்கு நானே சாட்சி. அரசு திட்ட துவக்கவிழாவில் பூஜை செய்ததை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தடுத்தது தேவையற்ற சர்ச்சை. எல்லோருமே புதிதாக வாகனம் வாங்கினாலும், கட்டிடம் கட்டினாலும் பூஜை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எந்த அரசியல்வாதியாவது கரி நாள் அன்று பதவியேற்றுள்ளார்களா என கேள்வி எழுப்பினார். வரும் காலங்களில் காங்கிரஸ் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தினால் தான் வளர்ச்சி அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இந்து கோயில் வருமானத்தை இந்த அரசு எடுத்துக்குதுங்க.. இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேங்க... பல்டி அடித்த திமுக MP

 

click me!