கலவரத்தால் கிடைத்த நீதி என்ன..? உண்மை எதுவென்று தெரியாமல் எதற்கு போராட்டம்..? நீதிபதி கேள்வி

By Thanalakshmi V  |  First Published Jul 18, 2022, 3:04 PM IST

கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்னவென்று கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் என்றும் இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்றும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். 
 


கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளி வளாகத்திற்குள் நூழந்த கும்பல், பள்ளி வாகனங்களை டிராக்டர் கொண்டு இடித்து நொறுக்கியும், தீ வைத்து எரித்தும் கொளுத்தினர். மேலும் வகுப்பறையில் கிடந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றிற்கு தீ வைத்து எரித்தனர். மாணவர்களின் அசல் சான்றிதழ் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல போலீஸ் திணறியது. அப்போது காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் சரக டிஐஜி உள்ளிட்ட 100க்கும் மேறபட்ட போலீசார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 10க்கும் மேற்பட்ட காவல் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கட்டுக்கடங்காமல் சென்ற போராடத்தை கட்டுபடுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம்..! தந்தையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை ஆயுதபடையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைத்தனர். மாணவி இறப்பு விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரம் திடீரென்று கோபத்தினால் ஏற்பட்டது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் போன்று தெரிகிறது என்றும் சிறப்பு புலன் விசாரணை நடத்தி வன்முறையாளர்களை கண்டறிய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட 4 பேரும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 4 பேரிடம் நீதிபதி அம்பிகா இளைஞர்கள் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா? என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை ; தமிழக அரசு மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய இபிஎஸ்

மேலும் நேற்று நடந்த்ச கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? உண்மை எது என்று தெரியாமல் எதற்காக போராட்டம்? என்று கேள்வியெழுப்பிய அவர், மாணவர்களின் சக்தியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளில் ஜுலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

click me!