கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம்..! தந்தையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

By Ajmal Khan  |  First Published Jul 18, 2022, 2:50 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி  உடற்கூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளது.


உடற்கூறாய்வு- 3 மருத்துவர்கள் நியமனம் 

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு தனியார் பள்ளியில் இருந்த அனைத்து பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகாவும், ஆதாரங்கள் உள்ளதாகவும் தங்கள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கும் மருத்துவர் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென நீதிபதி சதீஷ்குமார் முன்பு தந்தை ராமலிங்கம் தரப்பில் இன்று காலை வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து, அதில்  மாணவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என அறிக்கை அளித்தால், வன்முறை மூலம் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பு மீண்டு விடுமா என கேள்வி எழுப்பினார். 

Tap to resize

Latest Videos

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்

இதனையடுத்து உயர்நீதிமன்றம் அமைத்த மறு உடற்கூறாய்வு குழுவில், மருத்துவர் கீதாஞ்சலி, அரசு மருத்துவமனை, விழுப்புரம், மருத்துவர் ஜுலியானா ஜெயந்தி, அரசு மருத்துவமனை, திருச்சி, மருத்துவர் கோகுலநாதன், அரசு மருத்துவமனை, சேலம் ஆகிய மருத்துவர்களையும், தடயவியல் நிபுணர் சாந்தகுமாரியையும் நியமித்து உத்தரவிட்டது.  மேலும், உடற்கூறாய்வின்போது மனுதாரரின் வழக்கறிஞர் கே. கேசவன் உடனிருக்கலாம் என்றும் அனுமதித்திருந்தார்.இந்நிலையில், சின்னசேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் முறையீடு செய்தார். ஆனால் கிரிமினல் விவகாரங்களில்  தலையிட இந்த அமர்வுக்கு அதிகார வரம்பு இல்லை என்றும், இன்று காலை தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் எவ்வித மேல்முறையீடு என்றாலும் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும், இங்கு தாக்கல் செய்ய உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி வன்முறை ; தமிழக அரசு மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய இபிஎஸ்

 

click me!