திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் லோக் ஆயுக்தா சோதனை!

Published : Dec 21, 2023, 04:20 PM IST
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் லோக் ஆயுக்தா சோதனை!

சுருக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி. இவர், திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராகவும் உள்ளார்.  இவரது வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

கோவை கிருஷ்ணா காலணியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் 15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், அந்த கல்குவாரியை முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளதாக  குற்றம் சாட்டப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இச்சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை: முதல்வர் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்!

கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து, கிளம்பி சென்றனர். இதனைத்தொடர்ந்து, காரில் வராமல் அதிகாரிகள் மீண்டும் நடந்து வந்து சோதனை நடத்தினர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!