
ட்விட்டரில் நன்றி சொன்ன கனிமொழி...!
2G அலைக்கற்றை வழக்கில், கனிமொழி, ஆ.ராசா இருவரும் விடுதலையான பிறகு,நேற்று சென்னை திரும்பினர்
இவர்கள் இருவரையும் வரவேற்க, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் விமான நிலையம் சென்றார். அப்போது கனிமொழியை பாசத்துடன் கட்டி தழுவி, அன்பை வெளிப்படுத்தி வெற்றியை கொண்டாடினர்.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி
கனிமொழி மற்றும் ராசா இருவரும் கோபாலபுரம் சென்றவுடனே,கருணாநிதியை சந்தித்த கனிமொழி தன் அப்பாவுக்கு முத்தமிட்டு வெற்றியை கொண்டாடினர்.
கனிமொழி மற்றும் ராசாவிற்கு திமுகவினர் அமோக வரவேற்பு கொடுத்தனர். தற்போது தங்களது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ட்விட்டரில் கனிமொழி பதிவிட்டு உள்ளார்.
அதே சமயத்தில்,நேற்று தன் அண்ணன் ஸ்டாலின் மற்றும் துர்கா அண்ணியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் கனிமொழி.
ஆர்கே நகர் இடைதேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்ற வேதனையில் உள்ளபோது,கனிமொழி எதை பற்றியும் கவலை கொள்ளாமல்,தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார்.