பையனா? பொண்ணாப்பா? திடீரென குழந்தைக்கு பெயர் சூட்டசொன்னதால் குழம்பிய அதிமுக வேட்பாளர்

By Velmurugan s  |  First Published Apr 9, 2024, 12:27 PM IST

பிறந்த குழந்தைக்கு ராமச்சந்திரன் என வேட்பாளர் பெயர் சூட்ட, கவுன்சிலருக்கு தயாராகுங்கள் பிறகு நாங்கள் எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகிவிடுகிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கலகலவென பேச்சு.


காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வாலாஜாபாத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை, முத்தியால்பேட்டை, தாங்கி, வென்குடி, வில்லிவளம், மேல் ஒட்டிவாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், வேட்பாளர் ராஜசேகர் பூசிவாக்கம் கிராமத்தில் வாக்கு  சேகரிக்க வருகை புரிந்த போது ஆண் குழந்தைக்கு எம்ஜிஆரின் பெயரான ராமச்சந்திரன் என அக்குழந்தைக்கு பெயர் சூட்டினார். பின்பு பேசிய முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் அக்குழந்தையை கவுன்சிலருக்கு தயார் செய்யுங்கள். பிறகு நாங்கள் அவரை எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் ஆக்கி விடுகிறோம் என கலகலவென பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2019ல் பாலை குடித்து ருசிகண்ட பூனை மீண்டும் வருகிறது; ஏமார்ந்து விடாதீர்கள் முதல்வர் குறித்து வானதி விமர்சனம்

கிராம கிராமங்களாக கிராம மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

click me!