கள்ளக்குறிச்சி வன்முறை.. கெத்துக்கு வீடியோ எடுத்து ஸ்டேடஸ் வைத்த கலவரக் கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்

Published : Jul 28, 2022, 09:10 AM ISTUpdated : Jul 28, 2022, 09:17 AM IST
கள்ளக்குறிச்சி வன்முறை.. கெத்துக்கு வீடியோ எடுத்து ஸ்டேடஸ் வைத்த கலவரக் கும்பலை கொத்தாக தூக்கிய போலீஸ்

சுருக்கம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பையொட்டி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பையொட்டி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு நாட்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டம் 5வது நாளாக 17ம் தேதி வன்முறை வெடித்தது. இதில், பள்ளி வாகனம், மாணவர்களின் அசல் சான்றிதழ், மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகள் தீக்கரையாகின. இதனை, தடுக்க முற்பட்ட போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 

இதையும் படிங்க;- ஸ்ரீமதி, சரளா உடல் நல்லடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்காதது ஏன்? விடாமல் திமுகவை சீண்டும் வன்னியரசு

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ ஆதாரங்களை வைத்து கைது நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் வாகனத்துக்கு தீ வைத்த இருவரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பள்ளிக்கு தீ வைத்து கலவரக் கும்பல் எரித்து முடித்த பின்னர் தாமதமாக வந்து இரு போராளி இளைஞர்கள், கருகிய வகுப்பிற்குள் புகுந்து பள்ளியின் கதவுகளை கழற்றி வந்து உடைத்து அதனை தங்களது வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ்சாக வைத்திருந்தனர்.

வீடியோ ஆதாரத்துடன் விசாரிக்கையில் அவர்கள் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், கார்த்தி என்பது தெரியவந்தது. அவர்கள் பதிவு செய்த வீடியோவே அவர்களை கலவர வழக்கில் சிக்கவைத்துவிட்டது. அதேபோல், எரிக்கப்பட்ட காரின் மீது ஏறி அதன் சைலன்ஸரை திருட முயற்சித்த  இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் விளையாடும் சாதனங்களை சேதப்படுத்திய இளைஞர்கள், வாலிபால் கம்பத்தை பிடுங்கி பள்ளியின் இரும்பு தடுப்பு கம்பிகளை கும்பலாக உடைத்து சேதப்படுத்திவர்களும் வீடியோவால் வசமாக சிக்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் கலவரத்தில் ஈடுபட்டதாக அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீததர், சதத்தியமூர்த்தி, பாலமூர்த்தி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

PREV
click me!

Recommended Stories

தளபதி காத்து மாதிரி; அவரை யாராலும் தடுக்க முடியாது... 2026-ல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி - கர்ஜித்த புஸ்ஸி ஆனந்த்
இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!