Latest Videos

Kallakurichi: ஓயாத மரண ஓலம்! கதறும் கள்ளக்குறிச்சி! பலி எண்ணிக்கை 48ஆக அதிகரிப்பு! பலர் கவலைக்கிடம்.!

By vinoth kumarFirst Published Jun 21, 2024, 7:59 AM IST
Highlights

தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். இதில், எந்தெந்த மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 132 பேர் வாங்கி குடித்துள்ளனர். இதில், குடித்தவர்கள் அனைவருக்கும் வாந்தி  கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: Vijay : கள்ளக்குறிச்சி.. காலில் விழுந்து கதறிய பெண்.. கலங்கி நின்ற TVK தலைவர் தளபதி விஜய் - வைரல் வீடியோ!

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். இதில், எந்தெந்த மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்? கள்ளச்சாராய வழக்கில் இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?

இதில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.  விஷ சாராயம் அருந்திய 90க்கும் மேற்பட்டோர் இந்த 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இன்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 48 பேர் கள்ளச்சாராய விவகாரத்தில் இறந்துள்ளதாகவும், தற்போதைய உள்நோயாளிகள் 135 பேர் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!