Foundation Stone Laid: Rs. 290 Crore Kalaignar Library in Trichy : திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட இருக்கும் கலைஞர் நூலகத்திற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Kalaignar Library: Foundation stone laid for Rs. 290 crore project in Trichy : திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழக முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். திருச்சியில் ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட இருக்கிறது. அதோடு டைடல் பார்க் அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சியில் ரூ.290 கோடி செலவில் உலகத்தரம் மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் நாளை 22ஆம் தேதி பள்ளி விடுமுறை இல்லை; மாணவர்கள் ஏமாற்றம்!
கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் உலகத்தரத்திற்கு மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட 1, 97, 337 சதுர அடி பரப்பளவில் ரூ.250 கோடியில் தரை மற்றும் 7 தளங்களுடன் கூடிய நூலக கட்டடம், புத்தகங்கள், இ – புத்தகங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் என்று மொத்தமாக ரூ.290 கோடி செலவில் உலகத்தரத்திற்கு கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
10 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் கனமழை! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்!
7 மாடி கொண்ட கலைஞர் நூலகம்:
தரைதளம்:
வரவேற்பரை முதல் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படும். இதில் மாற்றுத்திறனாளிக்கான பகுதி, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பகுதி, காத்திருப்போ அறை, பத்திரிகைகள் அறை உள்ளிட்ட வசதிகளுடன் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.
முதல் தளம்:
அறிவியல் மையம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாடப்புத்தகங்கள் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் பகுதி
2ஆவது தளம்:
கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்கு கூடம்.
3ஆவது தளம்:
தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் – படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லேப்டாப் விலை இவ்வளவா.? சட்டசபையில் வெளியான முக்கிய தகவல்
4ஆவது தளம்:
ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டு பகுதி, இணைய டிஜிட்டல், ஆங்கில நூல்கள் உறுப்பினர்கள் மட்டும்.
5ஆவது தளம்:
அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி;
6ஆவது தளம்:
நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வை குறைபாடுடைய மாறுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி
7ஆவது தளம்:
காணொலி காட்சியரங்கம், தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, தகவல் அலுவர் அறை மற்றும் நிர்வாக பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நகரும் படிக்கட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.