இது மாநாடு அல்ல, ராமதாஸ் - அன்புமணியின் குடும்ப SHOW! இறங்கி அடிக்கும் காடுவெட்டி குருவின் மகள்

Published : May 13, 2025, 07:30 AM IST
viruthambigai kaduvetti guru

சுருக்கம்

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டை காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்பா-மகன் சண்டைக்காக மக்களை ஏமாற்றும் நாடகம் எனவும், இலவசக் கல்வி நிறுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

பாமக வன்னியர் மாநாடு- காடுவெட்டி குரு மகள் விமர்சனம் : பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த மாநாட்டில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு காடுவெட்டி குரு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உருவங்கள் வானில் காட்டப்பட்டது. மேலும் இந்த மாநாட்டில் இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்பா மகன் இடையே குடும்ப சண்டை

இந்த நிலையில் பாமக மற்றும் வன்னியர் மாநாட்டை காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை. கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மாநாடு நடத்தி அப்பா- மகன் சண்டை போடுவதால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது. அப்பாவை சரிகட்ட கூட்டத்தை கூட்டி தன்னை நிரூபிக்க இந்த நாடகத்தை அன்புமணி நடத்தியுள்ளதாக தெரிவித்தார். வன்னியர் சங்க மாநாட்டிற்கு நேற்று வந்த கூட்டமே எங்க அப்பாவுக்காக வந்த கூட்டம் தான். 2021ஆம் ஆண்டு 10.5% இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாக ராமதாஸ் - எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் நாடகம் ஆடி மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் விமர்சித்தார்.

ராமதாஸ் அறக்கட்டளை என பெயர் மாற்றியுள்ளார்கள்

காடுவெட்டி குரு அவர்கள் இருந்தவரை வன்னியர் அறக்கட்டளை கல்லூரியில் இலவச கல்வி கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின்னர் அது ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டு, இலவச கல்வியும் நிறுத்தப்பட்டது. இவர்கள்தான் இலவச கல்வியைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

வன்னியர் அறக்கட்டளை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாநாட்டில், கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் உரையாற்றவில்லை.

குடும்பத்தை முன்னிறுத்துவதற்காகவே நடத்தப்பட்ட ஒரு SHOW

இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்ட மாநாடு அல்ல, தங்கள் குடும்பத்தை முன்னிறுத்துவதற்காகவே நடத்தப்பட்ட ஒரு SHOW என தெரிவித்தவர், உயிர்நீத்த அந்த 27 தியாகிகளை அழைத்து முன்வரிசையில் அமரவைத்திருக்க வேண்டும். ஆனால், உங்கள் மருமகள், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!