முதல்வர் இறுதி ஊர்வலம் துவங்கியது - தொண்டர்களின் கண்ணீர் குளத்தில் நீந்திய படி பயணம்

First Published Dec 6, 2016, 4:36 PM IST
Highlights


முதல்வர் ஜெயலலிதா உடல் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவரது உடலைக்காண லட்சக்கணக்கான தொண்டர்கள் அலையலையாக வந்தவண்ணம் இருந்தனர். 

 

முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பொதுவாக அவர் உடல் எரியூட்டப்படும் ஆனால் , அவரது உடலை அடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 

முதல்வர் ஜெயலலிதா உடல் சரியாக 4-30 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று கூறிணாலும் இதுவரை ஊர்வலம் துவங்கவில்லை. அவரது உடலைக்காண லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் , பொதுமக்கள் ராஜாஜி மண்டபத்திலும் , அடக்கம் செய்யப்பட உள்ள மெரினா கடற்கரை எம்ஜிஆர் சமாதியிலும் திரண்டுள்ளனர். 

 

முதல்வர் உடல் அடக்கம் செய்யப்பட அவர் உடலை சுமந்து செல்லும் பீரங்கி வாகனம் அவருக்கு பிடித்த பச்சைநிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதே போல் முதல்வர் உடல் வைக்கப்படும் சந்தன பேழை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

 

முதல்வர் உடலை அடக்கம் செய்யும் அனைத்து வேலைகளும் எம்ஜிஆர் சமாதியில் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் ராகுல் காந்தி வருகைக்காக காத்திருந்தனர். 

சரியாக 4.10 க்கு இருவரும் அடுத்தடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் முப்படை வீரர்களால் தூக்கிவரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வேனில் ஏற்றப்பட்டது. 

சுற்றிலும் ராணுவ வீரர்கள்  , போலீசார் பாதுகாப்புடன் உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழை பீரங்கியில் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அவரது முகத்தை பார்க்கும் வண்ணம் கண்ணாடி பேழையின் மீது எந்த திரையும் ,மலர்மாலைகளும் போட்டு மூடப்படவில்லை.  

சரியாக 4.20 க்கு ஏற்றப்பட்ட வாகனம் தயாராக உள்ளது. எம்ஜிஆர் சமாதியின் அருகே முதல்வர் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் சந்தன பேழை முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா என்ற பெயரை தாங்கி அமைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வரின் உடல் கிடத்தப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்படும் . 

சரியாக 4-30 மணிக்கு உடல் வைக்கப்பட்ட வாகனம் புறப்பட்டது . அண்ணா சாலை , வாலாஜா சாலை , கடற்கரை காமராஜர் சாலையில் திரும்பி எம்ஜிஆர் சமாதியை அடையும். 

click me!