முதல்வர் ஜெயலலிதாவுக்கு ECMO சிகிச்சை....!!!

First Published Dec 5, 2016, 11:10 AM IST
Highlights


முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 12 மணி நேரம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இதயத்தை செயற்கையாக செயல்பட வைக்கும் ஒரு உபகரணமாகும்.

இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும். சிபிஆர் எனப்படும் உயர்வகை இதய சிகிச்சை உபகரணம் உண்டு. இந்த கருவியும் பலனிக்காதபோதே ஈசிஎம்ஓ கருவி பொருத்தப்படும். இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த உபகரணம்தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உபகரணம், ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி அதை உந்தி தள்ளும். ஆக்சிஜனை சேர்த்து கார்பன் டயாக்சைடை வெளியேற்றும். இதயம் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இக்கருவி உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!