முதல்வர் உடல்நிலைபற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - தமிழக காவல்துறை எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
முதல்வர் உடல்நிலைபற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - தமிழக காவல்துறை எச்சரிக்கை

சுருக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது , முதல்வர் உடல்நிலைப்பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நன்றாக தேறிவந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்த நிலையில் திடீரென நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் உடல் நிலை குறித்து நேற்று பல்வேறு வதந்திகள் கிளப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்திற்குள்ளாகினர். 

அப்போலோ மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீரும் கம்பலையுமாக குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் மிகுந்த சிரமப்பட்டனர்.

வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் அவரவருக்கு தோன்றியதை பதிவு செய்ததால் வதந்தி ரெக்கை கட்டி பறந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் மக்கள் குவிந்தனர். பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டன. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். உணவு பொருட்களை வாங்கி வைத்து கொள்ள கடைகளில் மக்கள் முண்டியடித்தனர்.

இதையடுத்து நள்ளிரவில் முதல்வர் உடல் நிலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ராமானுஜம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று காலை காவல்துறை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை உள்ளது. முதல்வர் குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ் அப் , ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வதந்திகளை யாராவது பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

 பொது மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எதுவானாலும் அரசின் அறிவிப்பு முறையாக வரும் அதையே மட்டுமே நம்ப வேண்டுமென்று கேட்டுகொண்டுள்ளனர். 

தமிழகத்தில் சட்ட்ம் ஒழுங்கு இயல்பாக இருக்கிறது, ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 14 கம்பெனி பட்டாலியன் உள்ளது என்று தேவைப்பட்டால் அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!