1.64 கோடியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்…

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
1.64 கோடியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்…

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.1.64 கோடி மதிப்பு பயிர்க்கடன்களை, 303 விவசாயிகளுக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவுக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 35 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த 303 விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான பயிர்கடன்களை வழங்கிப் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, முன்னாள் வணிகவரி ஆலோசனைக்குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அ.அமுதா அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் வரவேற்றார்.

விழாவில், கூட்டுறவு சங்கங்களின் செய்யாறு சரக துணைப் பதிவாளர் ஏ.சரவணன், கூட்டுறவுத் துறை சார் - பதிவாளர் ரா.சீ.செல்வன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி.கனகராஜ், பொது மேலாளர் கோ.ராமச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!