செப்டம்பர் 22 முதல் இன்றுவரை.... மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்து வந்த நாட்கள்...

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
செப்டம்பர் 22 முதல் இன்றுவரை.... மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா  கடந்து வந்த நாட்கள்...

சுருக்கம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, செப்டம்பர் 22 முதல் இன்றுவரை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகளை இங்கு காணலாம்.

செப்டம்பர் 22 : நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டாா்.

 

செப். 23 : முதலமைச்சா் உடல் நிலை சீராக இருப்பதாக  மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

செப். 24 : வழக்கமான உணவுகளை முதலமைச்சா் ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல் தொிவிக்கப்பட்டது.

 

செப். 25 : மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிங்கப்பூர்  செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

 

செப். 29 : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் முதலமைச்சர் ஒத்துழைப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

 

அக்டோபர் 2 : லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வருகை.  முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.

 

அக். 3 : தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.

 

அக். 4 : உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.

 

அக். 6 :டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள்  சென்னை வருகை. அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.

அக். 8 : முதலமைச்சர் ஜெயலலிதாவின் நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

அக். 10 :சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வருகை. முதலமைச்சருக்கு உடற்பயிற்சி அளித்தனர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

 

அக். 21 : தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட டாக்டர்கள் தொடர்ந்து முதலமைச்சருக்கு சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

 

நவம்பர் 19 : தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

டிசம்பர் 3 :- டெல்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.

 

டிச. 4 :ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
சென்னையில் இனி தண்ணீர் பிரச்சனையில்லை.. குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் 'மெகா' திட்டம்! சூப்பர்!