நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் மூலம் அரசியலில் நுழைந்துள்ளார். அவரது முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது, ஆனால் காவல்துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார். இது திமுகவின் தலையீடு காரணமா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், ஒரு படத்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு அரசியலில் கால் பதிக்கவுள்ளார். விஜய்க்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர் பலமே விஜய்யை ஆட்சியில் அமர்த்தும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு தீவிர அரசியலில் களம் இறங்கிவுள்ளார். தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த தேதியும் குறித்துவிட்டார். அதன் படி வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிராமக நடைபெற்று வருகிறது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை.! முக்கிய குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறும் போலீஸ்.! 2 மாதமாக நடப்பது என்ன.?
மாநாட்டிற்கு அனுமதி - காலம் தாழ்த்தும் போலீஸ்
மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள் பல கேள்விகளை நேரில் கேட்டறிந்தனர். இதனையடுத்து மாநாடுக்கான அனுமதியை போலீசார் கொடுத்து விடுவார்கள் என தவெகவினர் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் 21 கேள்விகளை கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி புஸ்ஸி அனைந்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மாநாடு நடைபெறும் நேரம் என்ன.? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன.? உணவு எப்படி கொடுப்படவுள்ளது. மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். மேடையில் யாரெல்லாம் அமருவார்கள். வாகன வசதி என்ன.? மாநாட்டிற்கு மின்சாரம் எங்கிருந்து எடுக்கப்படவுள்ளது. நில உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டுவிட்டதா என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளனர்.
திமுகவிற்கு அச்சமா.?
இந்த கேள்விகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களோடு ஆலோசனைக்கு பிறகு காவல்துறையிடம் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஆளுங்கட்சியான திமுக வேண்டும் என்றே விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லையென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மற்ற கட்சிகளின் மாநாட்டிற்கு இது போன்று கேள்விகளை கேட்கப்படுவதில்லையெனவும், வாய் மொழியாகவே தகவல் கேட்கப்படும் என கூறுகின்றனர். எனவே விஜய்யின் அரசியல் வருகையால் திமுக அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பயப்படும் திமுக- ஜெயக்குமார்
இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தியா ஜனநாயக நாடு, தமிழ்நாட்டில் ஜனநாயகம் உண்டு யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம். அப்படி இருக்கும்போது விஜயை கண்டு ஏன் திமுக பயப்புடுகிறது என கேள்வி எழுப்பியவர், விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்படும். திமுகவின் ஓட்டுக்கள் தான் விஜய்க்கு சென்று விடும் என திமுக பயப்படுகிறது. இது திமுகவின் எண்ணம் என தெரிவித்தார். அதே நேரத்தில் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு தான் வரும். இது அடிப்படையான விஷயம். ஒவ்வொரு தேர்தலிலும் நடைபெறக்கூடிய விஷயம் வாக்குகள் சிதறாது என எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. திமுக மீது கோபம் கொள்பவர்கள் சட்டமன்றத் தேர்தலில் பொருத்தவரை அதிமுக வாக்களிப்பார்கள் என கூறினார்.
அமெரிக்காவில் Tony Bennett சிலை முன்பு ஸ்டாலின் உற்சாக போஸ்.! ஆல்பம் இதோ