ஆம்ஸ்ட்ராங் கொலை.! முக்கிய குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறும் போலீஸ்.! 2 மாதமாக நடப்பது என்ன.?
வட சென்னையின் முக்கிய தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் பல திருப்பங்கள். பழிக்குப்பழி, அரசியல் மற்றும் ரவுடிகள் என பல கோணங்களில் நீண்டு செல்லும் விசாரணை. 2 மாத்த்தை நெருங்கும் நிலையில் கொலையில் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் என்ன.?
வட சென்னையில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், படிக்க முடியாத இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், சட்டப்படிப்பு படிக்க ஏராளமானோர்களுக்கு உதவியும் உள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக அதிமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு சுயேட்சையாக வெற்றி பெற்று சாதித்தும் உள்ளார். தேசிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர் மாநில தலைவராக உயர்ந்தார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர்கள் அரசியலிலும் முத்திரை பதித்தார்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க ஆம்ஸ்ட்ராங் வந்த போது மர்ம நபர்கள் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆபீஸில் வைத்து கதற,கதற என்னை சீரழித்தீங்களே.! மறந்துவிட்டீங்களா சீமான்-விஜயலட்சுமி பகீர் வீடியோ
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கொலை நடந்த இரவில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள், சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், ராம், செல்வராஜ், சதீஷ், நரேஷ், சீனிவாசன் என மொத்தம் 11 பேர் அடுத்தடுத்து காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கொலைக்கு பின்னனியில் வேறு யாரோ இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையெனவும் அடித்து கூறினார்கள்.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொண்டனர். இதனால் பயந்து போன மற்ற கைதிகள் கொலைக்கான காரணத்தை கூற தொடங்கினர். இதில் சென்னை ஜாம் பஜாரை சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலையையும் போலீசார் கைது செய்தனர். பல வகையிலும் விரிவடைந்த விசாரணையில் திமுக, அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் முக்கிய நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
அடுத்ததாக இந்த கொலையை செயல்படுத்த திட்டம் போட்டது பிரபல தாதா நாகேந்திரன் என தகவல் வெளியானது. வேலூர் சிறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டவர் சிறையில் இருந்து திட்டம் போட்டு கொடுத்ததாக கூறப்பட்டது. சிறையில் போன் மூலம் ஆட்களை கொலை செய்ய தயார் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நாகேந்திரனின் மகன் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான அஸ்வத்தாமனுக்கும் மோதல் இருந்ததாகவும் இந்த மோதலால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து தான் நாகேந்திரன் ரவுடி சம்போ செந்தில் மூலம் கொலையை அரங்கேற்றியதாகவும் கூறப்படுகிறது.
வேலை தேடி சென்னை வரும் பெண்களே உஷார்; விபசார கும்பலிடம் இருந்து இளம் பெண்கள் மீட்பு
சிலந்தி வலை போல விரியும் இந்த கொலை வழக்கில் சம்போ செந்தில், சீசிங் ராஜா, மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இரண்டு மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த 3 பேரும் பல இடங்களுக்கு தப்பி செல்வதாக கூறப்படுகிறது. இதில் மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்புடைய இயக்குனர் நெல்சனின் மனைவியையும் போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனிடையே கொலை நடந்து 60 நாட்களை நெருங்கும் நிலையில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில போலீசார் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படண இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஆனால் இந்த கொலை வழக்கில் நிலப்பிரச்சனை, பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்வதில் பிரச்சனை, முன் விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து என பல வகையிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆமஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு கொலை சம்பவம் கூட பெரிய அளவில் நடைபெறவில்லை. ரவுடிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குண்டர் சட்டமும் பாய்ந்ததுள்ளது.
அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை பிடித்தால் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முடிச்சு அவிழும் என எதிர்பார்கப்பட்டுகிறது..இதற்காக போலீசார் தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையே தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இந்த நேரத்திலும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.