கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை.! வெளியான காரணம்

By Ajmal Khan  |  First Published Sep 2, 2024, 10:56 AM IST

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், இறுதியாண்டு படித்து வந்த மாணவி ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், காதல் தோல்வியே தற்கொலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.


தனியார் மருத்துவ கல்லூரி- மாணவி தற்கொலை

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி கல்லூரி விடுதியின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது மீனாட்சி மருத்துவ கல்லூரி, இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி விடுதி அருகிலையே மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் உள்ளது. இங்கும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவ, மாணவிகளும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

HOLIDAY : செப்டம்பர் மாதத்தில் மட்டும் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு லீவா.!! மாணவர்கள் ஹேப்பியா.?

தற்கொலைக்கு காரணம் என்ன.?

இந்தநிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் உள்ள மாடியில் மாணவி ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனை பார்த்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில்  திடீரென மாணவி 5வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மன அழுத்தத்திற்கு சிகிச்சை

மாணவி மரணம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், மீனாட்சி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. உயிரிழந்த மாணவி மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாதவும் போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.மாணவி மரணம் தொடர்பாக  பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலை சம்பம் அந்த கல்லூரி மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

TOMATO : ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவுதானா.? கிடு, கிடுவென குறைந்த விலை- காரணம் என்ன.?

click me!