HOLIDAY : செப்டம்பர் மாதத்தில் மட்டும் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு லீவா.!! மாணவர்கள் ஹேப்பியா.?
ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்தது போல செப்டம்பர் மாதத்தில் தொடர் விடுமுறை கிடைக்குமா? விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி என பண்டிகை நாட்கள் வரும் நிலையில் பள்ளிகளுக்கு எப்போது விடுமுறை?
ஆகஸ்ட் மாதம் - மாணவர்கள் கொண்டாட்டம்
பள்ளி மாணவர்களுக்கு சனி,ஞாயிறு விடுமுறை முடிந்தால் அடுத்து எப்போது விடுமுறை வரும் என காலண்டரில் தேடிப்பார்ப்பார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு குஷியான மாதமாகவே அமைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 19 முதல் 20 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டது. 10 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. குறிப்பாக சுதந்திர தினவிழா, கிருஷ்ண ஜெயந்தி விழா என தொடர் விடுமுறை கிடைத்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை வந்ததால் வெள்ளிக்கிழமையும் பெரும்பாலான பள்ளியில் விடுமுறை விடப்பட்டதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனையடுத்து கிருஷ்ண ஜெயந்தி திங்கட்கிழமை வந்தது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விடுமுறை கிடைத்தது. இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் மாதத்தை கொண்டாடி தீர்த்தனர்.
செப்டம்பர் மாத விடுமுறை நாட்கள்
இந்தநிலையில் தமிழக அரசோ பள்ளி வேலை நாட்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மாதத்தின் 2வது சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா.? அல்லது தொடர்ந்து பள்ளிகள் செயல்படுமா என்பதை தற்போது பார்க்கலாம்.
9 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்பு
செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை சனிக்கிழமையான 14, 21 ஆகிய 2 நாட்கள் சேர்த்து 21 நாட்கள் வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே வருகிற சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை விடப்படவுள்ளது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் விநாயகர் சதூர்த்தி வருவதால் இந்த விடுமுறை மாணவர்களுக்கு கூடுதல் லீவு கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது.
ஓணம் பண்டிகை
இதனையடுத்து செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை மிலாது நபி விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கவுள்ளது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர் விடுமுறை கிடைக்கவாய்ப்புள்ளது. இதனால் மாணவர்கள் ஓரளவு சந்தோஷத்தில் உள்ளனர். இருந்த போதும் ஓணம் உள்ளிட்ட பண்டிகை காரணமாக செப்டம்பரில் மட்டும் மொத்தம் 9 விடுமுறைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கொண்டாட்ட நாட்களை கொண்ட அக்டோபர்
அடுத்த மாதமான அக்டோபர் மாதம் மாணவர்களுக்கு மீண்டும் உற்சாகத்தை கொடுக்கும் மாதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் உள்ளது. இந்த மாதத்தை வரவேற்க மாணவர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.