TOMATO : ஒரு கிலோ தக்காளி விலை இவ்வளவுதானா.? கிடு, கிடுவென குறைந்த விலை- காரணம் என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சரிந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக பல மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான தக்காளி சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக விற்பனை விலையானது குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை. மற்ற காய்கறிகளின் விலை விவரம் உள்ளே.
வெங்காயம் விலை என்ன.?
கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் கேரட் விலை
கேரட் ஒரு கிலோ 130 க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அரைக்கால் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Power Shutdown : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின் தடை தெரியுமா.? இதோ லிஸ்ட்
பீன்ஸ் விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது தக்காளி விலை
சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளியின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. தக்காளி விலை இன்றைய நிலவரத்தை பொருத்தவரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளியானது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.