எம்.ஜி.ஆர் நினைவு நாளில் நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது அநியாயம். நடிகர் சங்கத்துக்கும் நடிகர்களுக்கும் எத்தனையோ நல்லது செய்தவர் எம்.ஜி.ஆர், ஆனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கு நடிகர் சங்கம் விழா எடுக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகம் போல் சாலைகள்
சென்னை காசிமேட்டில் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை பார்வையிட்டப்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் நீக்கப்படவில்லை. தொழில்நுட்பம் மிகுந்த காலக்கட்டத்தில் இது போன்ற குறைபாடுகள் இல்லாமல் சரியான முறையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்ய வேண்டும்
undefined
சென்னை சாலைகள் எல்லாம் செவ்வாய் கிரகம் போல உள்ளது. மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. அதனை சரி செய்ய அரசுக்கு அக்கறை இல்லை. ஆனால் நன்றாக உள்ள சாலைகளை பெயர்த்து எடுத்து மீண்டும் போட்டு வருகிறார்கள். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. ஆட்சியில் உள்ளதால். எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பதாக விமர்சித்தார்.
துரைமுருகன் 60ஆயிரம் கோடி ஊழல்.?
அமலாக்கத்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மடியில் கனம் இல்லை என்றால் ஆஜராக வேண்டியது தானே என கேள்வி எழுப்பிய அவர், ஆட்சியரை காப்பாற்ற நினைப்பது ஏன்? என கேட்டார். திமுக நிர்வாகியே சொல்கிறார் துரைமுருகன் 60 ஆயிரம் கோடி ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளது என சொல்கிறார். அதையே ஆதாரமாக அமலாக்கத்துறை எடுத்துக்கொள்ள வேணும். குடியாத்தம் குமரனை அழைத்து அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் விசாரித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நீட் தேர்வு ரத்து
40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, பூனை பகல் கனவு காண்பதை போல 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என சொன்னவர்கள் இன்று 50 லட்ச கையெழுத்து பெறுகிறார்கள். ஆட்கள் கிடைக்காமல் எல்.கே.ஜி குழந்தைகளிடம் எல்லாம் கையெழுத்து பெறுகிறார்கள். காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. தற்போது மாவட்ட செயலாளர் தான் எஸ்.பி பகுதி செயலாளர் தான் ஏ.சி என செயல்பட்டு வருகிறார்கள்.
கருணாநிதிக்கு நூற்றாண்டு விழாவா.?
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது அநியாயம். நடிகர் சங்கத்துக்கும் நடிகர்களுக்கும் எத்தனையோ நல்லது செய்தவர் எம்.ஜி.ஆர், ஆனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கு நடிகர் சங்கம் விழா எடுக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா எடுப்பது ஏன். நடிகர் சங்க நிர்வாகிகள் விழா தேதியை மாற்ற வேண்டும் என கோரினார். சேரி என்ற வார்த்தையை குஷ்பு தவிர்த்திருக்கலாம். கூட்டங்களில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்