ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஜமாலுதீன் ஓய்வு - தலைமை செயலக புதிய செயலாளர் யார்?

 
Published : May 31, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஜமாலுதீன் ஓய்வு - தலைமை செயலக புதிய செயலாளர் யார்?

சுருக்கம்

jamuludeen retiring from assembly secretary post

ஜெயலலிதாவின்  ஆசி  பெற்ற  ஜமாலுதீன்  ஓய்வு - புதிய  சட்டமன்ற  செயலாளர்  யார்? நம்பிக்கை  ரகசிய  வாக்கெடுப்பு  முடியாது  என்று  சொன்னவர்.

தமிழக சட்டப்பேரவையின் செயலாளரும், ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர் என்று கருதப்பட்டவருமான ஜலாலுதீன் இன்று ஓய்வு பெறுகிறார். 

இதையடுத்து புதிய சட்டப்பேரவை செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர் என்றாலும், அதன் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து வைத்திருப்பதுடன், அதை திறம்பட வழி நடத்துவதில், சட்ட பேரவை செயலாளருக்கு முக்கிய பங்கு உண்டு.

அந்த அடிப்படையில், சட்டப்பேரவை செயலாளராக இருந்து  அதற்கான விதிமுறைகளை கரைத்து குடித்தவர் ஜமாலுதீன். இவரை  பற்றி ஏராளமான தகவல் உண்டு. 

சட்டசபையில், ஜெயலலிதாவின் கண்ணசைவுக்கு ஏற்ப மின்னல் வேகத்தில் இயங்கக்கூடியவர். 

உறுப்பினர்களின்  கேள்விக்கு அமைச்சர் சரியாக பதில் அளிக்க தவறினால், ஜெயலலிதாவின் பார்வை ஜமாலுதீன் பக்கம் திரும்பும். 

அவ்வளவுதான், அடுத்த நொடியே, சம்பந்தப்பட்ட கோப்புகள், ஜெயலலிதாவின் இருக்கைக்கு வந்துவிடும். அடுத்து ஜெயலலிதா, அதற்கான பதிலை அளிப்பார்.

அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் எண்ணம் அறிந்து, அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து பணியாற்றும் திறமை கொண்டவர் ஜமாலுதீன்.

அதேபோல்,  இக்கட்டான நேரங்களில் சபாநாயகர் அருகில் சென்று, ஓரிரு வார்த்தைகளை கூறுவார். அடுத்து சபாநாயகர் அறிவிப்பை வெளியிடுவார். நெருக்கடி முடிவுக்கு வந்துவிடும். அதனால், ஜமாலுதீன் மீது திமுகவினருக்கு கடும் கோபம் உண்டு. 

சட்டமன்றத்தில், காரசாரமான வாக்குவாதம் மற்றும் மோதல் எழும்போதெல்லாம் கூட, ஜமாலுதீன் எந்த சலனமும் இன்றி அமைதியாகவே இருப்பார். 

தவிர்க்க முடியாத சூழலில் மட்டும், தேவையான ஆலோசனையை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் சபாநாயகருக்கு சொல்வார். பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

ஜமாலுதீனின் திறமையையும், அவரது வேகத்தையும் கண்ட ஜெயலலிதா, 2012 ம் ஆண்டு ஓய்வு பெற இருந்த அவருக்கு, மேலும் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ரகசிய வாக்கெடுப்பு தேவை இல்லை என்று அறிவுறுத்தியதும் இவரே என்று கூறப்படுகிறது.

அதேபோல், சட்டசபை காவலர்களை தவிர, பாதுகாப்புக்காக காவல் துறையில் இருந்து அதிகாரிகளை சட்ட பேரவைக்கு கொண்டு வந்து நிறுத்தியதன் பின்னணியிலும், இவரது ஆலோசனை இருந்ததாகவே கூறப்படுகிறது.

ஜமாலுதீனின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனினும், அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க கூடாது என்று தலைமை செயலக அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சட்டசபை செயலகத்தில் மட்டும் செயலாளர் கூடுதல் செயலாளர், துணைச் செயலாளர் என 9 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.

அதேபோல், நிதித்துறை உள்ளிட்ட பல துறைகளில் இன்று 46 பேர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!