திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 1:37 PM IST

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலில் அகோரிகள் மண்டை ஓடுகளால் செய்யப்பட்ட மாலை அணிந்து கொண்டு சிறப்பு யாகம் வளர்த்து பூஜை செய்தனர். 
 


திருச்சி  அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன்  பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கிய முதல்நாள் முதல் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

வெற்றிமாறன் பெரியாரின் பேரன்.. ராஜராஜன் விஷயத்தில் பாஜகவினரை பந்தாடிய திருமாவளவன்

Tap to resize

Latest Videos

இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஜெய் அகோரகாளிக்கு குருதி அபிஷேகம் நடைபெற்றது. இதனை  தொடர்ந்து அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற மகா ருத்ரா யாகத்தின் போது  அகோரி மணிகண்டன் மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டு ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி மந்திரங்களை ஜெபித்தார்.

பின்தங்கியுள்ள தென்மாவட்டங்ளின் வளர்ச்சிக்கு அரசுக்கு நடவடிக்கை எடுக்கமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி 

தொடர்ந்து நவதானியங்கள், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாக பூஜை செய்தார். ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் டம்ராமேளம் அடித்தும், மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்குமுழங்கியும், மந்திரங்களை ஓதினர். இதில் அகோரிகள், பெண் அகோரிகள் மற்றும்  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

click me!