நம்ப வைத்து ஏமாற்றிய முதல்வர்! போராட்டத்துக்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Published : Mar 15, 2025, 09:30 AM ISTUpdated : Mar 15, 2025, 09:37 AM IST
நம்ப வைத்து ஏமாற்றிய முதல்வர்! போராட்டத்துக்கு நாள் குறித்த அரசு ஊழியர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சுருக்கம்

Old Pension Scheme: திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏமாற்றமடைந்துள்ளனர். 

திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்,  காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிதி பற்றாக்குறையினால் பழைய ஓய்வூதியம் மீண்டும் கொண்டு வரும் முடிவில் தமிழக அரசு இல்லை. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்திலும் போராட்டம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதாவது 
தமிழக பட்ஜெட்டை எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாததால் வரும் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அதிரடியாக அறிவித்து முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது போராட்டக் களத்திற்கு வந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு தேர்தல் வாக்குறுதியிலும் அச்சடித்து உறுதிப்படுத்தினார். இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் தேர்தல் களத்தில் முழு ஆதரவளித்தனர். முதல்வர் ஆனபின்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டிலும், 2022 ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் கலந்து கொண்டு இந்த ஆட்சி உங்களால் அமையப்பெற்றது. உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

ஆகவே கொரோனா காலகட்டத்திலும் சென்னை தூத்துக்குடி பெரு வெள்ளத்திலும் இந்த ஆட்சியோடு கரம்கோர்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் பலபேர் தனது இன்னுயிரை இழந்து மேற்கண்ட இடர்பாடுகளிலிருந்து மீள முழு ஆதரவளித்தனர். ஆகவே எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எப்பொழுதெல்லாம் போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல் படுத்தினாரே தவிர நான்காண்டுகள் கழிந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே கடந்த  ஜனவரி 27ம் தேதியன்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி நான்கு கட்ட போராட்டம் திட்டமிட்டோம். அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 25ம் தேதி மறியல் போராட்டத்தை நோக்கியிருந்த சூழலில் பிப்ரவரி  24ம் தேதியன்று நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஜாக்டோ-ஜியோவை பேச்சவார்த்தைக்கு அழைத்து நான்கு வார கால அவகாசம் தெரிவித்து அதற்குள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி 25ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டமாக தமிழகம் முழுவதும் நான்கு லட்சத்திற்குமேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் எழுச்சிகரமாக பங்கேற்றனர்.

தற்போது மார்ச் 13ம் தேதி மீண்டும் ஜாக்டோ-ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்துவது, தொகுப்பூதிய ஊதியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார்.

ஆகவே இன்றைய பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. ஆகவே நேற்று நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதென முடிவாற்றப்பட்டது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ-ஜியோவின் நியாயமான வாழ்வாதார 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்: தமிழக பட்ஜெட்டில் அறிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தகட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என  தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!