
ஜெ.தீபாவும் சர்ச்சையும்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா. இவருக்கும் மாதவன் என்பவருக்கும் 11ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு வீட்டார் ஏற்பாட்டில் திரும்ணம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் வாரிசாக தீபா பார்க்கப்பட்டார். அப்போது அதிமுகவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தனி கட்சியை தொடங்கி சில காலம் நடத்தி வந்தார். இதனையடுத்து போயஸ் கார்டன் வீடு தங்களுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் தீபா மற்றும் அவரது சகோதரர் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து அந்த வீட்டை ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கால கட்டத்தில் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 15 லட்சம் பேர் நீக்கம்..! ஏன் தெரியுமா..?
கணவருடன் தகராறு
இது தொடர்பாக தீபா கருத்து தெரிவிக்கையில், 11 வருடங்கள் வாழ்ந்துவிட்டு தற்போது, உன்னை பிடிக்கவில்லை. சேர்ந்து வாழமுடியாது என மாதவன் தெரிவிப்பதாக வேதனையோடு கூறினார். மேலும் எதனால், இப்படி மாறினார் என்பது தெரியாது என கூறியிருந்தார். இதற்க்கு பதில் அளித்த மாதவன், தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான்தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறுதான் என கூறியிருந்தார்.
தேனி எம்பி ரவீந்திரநாத் தலைமையில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்..! புறக்கணித்த திமுக எம்எல்ஏக்கள்..
இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்ததால், அவ்வப்போது, சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. தம்பதிகள் இருவரும் இந்த தகவலை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கடவுளின் வரமாக இந்தக் பெண் குழந்தை கிடைத்து இருப்பதாக தீபா தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை சமூக வலைதளத்தில் தீபா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''தனது பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தை கடவுளின் வரம்'' என்று தீபா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்