வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி ராக்கிங்: வெளியான பகீர் தகவல்கள்!!

By Pothy Raj  |  First Published Nov 10, 2022, 11:10 AM IST

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி ஓடவைத்து, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்த கொடுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. 


வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி ஓடவைத்து, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்த கொடுமையான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. 

ரெடிட்டி தளத்தில் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர் ராக்கிங்கில் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்; 7 மாணவர்கள் சஸ்பெண்ட்; வைரல் வீடியோ!!

இந்த விவகாரம் வெளியாகி ஏற்கெனவே சிஎம்சி கல்லூரி நிர்வாகம் 7 சீனியர் மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரெடிட் தளத்தில் தாங்கள் அனுபவித்த கொடுமை குறித்த விளக்கியபோதுதான் அதன் கொடூரம் தெரியவந்தது. 

கடந்த அக்டோபர் 9ம் தேதி ரெடிட் தளத்தில் வெளியான வீடியோவில், முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களை அரைகுறை ஆடையுடனும், நிர்வாணமாகவும் ஓட வைத்து, அவர்களை குறைந்தபட்ச பாலியல் செயல்களைச் செய்ய வைத்து கொடுமைப்படுத்தும் காட்சி வெளியானது. அதுமட்டுமல்லாமல் சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களின் அந்தரங்க உறுப்புகளில் உதைத்தும், கொடுமைப்படுத்திய காட்சியும் இருந்தது

பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நாங்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, நடக்கவைக்கப்பட்டோம். எங்களின் கையில் ஒரு பாட்டில் தரப்பட்டு அதில் வலுக்கட்டாயமாக சுயஇன்பம் செய்ய வற்புறுத்தப்பட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்

ஆசியாவிலேயே தலை சிறந்த 200 கல்வி நிறுவனங்கள்.! அண்ணா பல்கலை. சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

ரெடிட் தளத்தில் மாணவர்கள் ராக்கிங் குறித்த வீடியோ பதிவேற்றம்செய்யப்பட்டிருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “ ஜூனியர் மாணவர்கள் வலுக்கட்டாயமாக உள்ளாடைகளுடன் வலம்வர வைக்கப்பட்டார்கள். இதை விடுதியின் வார்டன், துணை வார்டன், சில மருத்துவர்களும் பார்த்துள்ளனர். அவர்கள் சென்றபின், மாணவர்கள் விடுதியின் மைதானத்தில் உள்ளாடைகளுடன் வலம்வர வைக்கப்பட்டனர்.

ஜூனியர் மாணவர்கள் உள்ளாடைகளுடன் மைதானத்தை வலம்வரும்போது அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் சீனியர் மாணவர்கள் உதைத்தும் ராக்கிங் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விடுதியின் மாடிக்கு ஜூனியர் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, உள்ளாடைகளுடன் தலைகீழாக தொங்கவிடப்பட்டனர். இதற்கு ஜூபிடர் வாட்ச் என்று பெயர்வைத்து சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். இறுதியாக மாணவர்கள் உள்ளாடைகளும் களையப்பட்டு, சீனியர் மாணவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதியில் உணவு சாப்பிடும் பகுதியில், குறிப்பிட்ட மேஜைப்பகுதியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு சீனியர் மாணவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும்.முதலாம் ஆண்டு படிக்கும் அனைத்து மாணவர்களும், சீனியர் மாணவர்களின் முழுப் பெயர், மாவட்டம், ஆண்டு விவரங்களை அறிந்திருக்க வேண்டும். அந்த விவரங்கள் தெரியாத ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக ராக்கிங் செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடியின் பயண விவரமும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள திட்டங்களும்... முழு விவரம் உள்ளே!!

ரெடிட்டில் ஒரு மாணவர் கூறுகையில் “ சிறிய, அற்ப காரணங்களுக்கெல்லாம், சீனியர் மாணவர்கள் கன்னத்தில் அறைந்தனர். ஜூனியர் மாணவர்களின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்துவதை சீனியர் மாணவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். சிஎம்சி கல்லூரி முதல்வருக்குஇது தொடர்பாக புகார் சென்றது. 

மாணவர்கள் விடுதியில் நடந்த ராக்கிங் குறித்து சிஎம்சி கல்லூரி இயக்குநர் விக்ரம் மாத்யூஸ் கூறுகையில் “ எங்களுக்கு அடையாளம் தெரியாத, பெயர் குறிப்பிடப்படாத ஒருவரிடம் இருந்து கடிதம் வந்தது. விடுதியில் ராக்கிங் நடப்பது தொடர்பான புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அப்போது நடவடிக்கை எடுப்போம். எந்தவகையிலும் ராக்கிங் நடவடிக்கையை பார்த்து அமைதியாக இருக்கமாட்டோம். குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்

இந்த புகார் கடிதம் வெளியானதையடுத்து, கல்லூரிக்குள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சீனியர் மாணவர்கள் 7 பேர்  இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

click me!