தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைக்கும்.. தீயாக பரவும் செய்தி.. வானிலை மையம் பரபரப்பு விளக்கம்..

By Thanalakshmi VFirst Published Jul 7, 2022, 2:37 PM IST
Highlights

தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அடுத்த சில வாரங்களுக்கு அதிகப்படியான குளிர் உணரப்படும் என பரவும் செய்தி உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை

சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் அதிகப்படியான குளிர், வரும் நாட்களில் உணரப்படும் என்ற சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்துள்ளது.  மேலும் சமூக வலைதளங்களில் பரவும் உண்மைக்கு புறம்பானது என்றும் சென்னை வானிலை மண்டலம் அறிவித்ததாக பரப்பப்படும் செய்தி உண்மையல்ல என்றும் வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க:உஷார்.. ! இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மிதமான மழை.. வானிலை அப்டேட்

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு - எங்கு தெரியுமா?

அதே போல் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!