வெடித்தது சொத்து பிரச்சினை..! நடிகர் பிரபு, ராம்குமார் ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் வழக்கால் பரபரப்பு

Published : Jul 07, 2022, 12:17 PM IST
வெடித்தது சொத்து பிரச்சினை..! நடிகர் பிரபு, ராம்குமார் ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் வழக்கால் பரபரப்பு

சுருக்கம்

தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம் சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  

சொத்துக்களை முறையாக பிரிக்கவில்லை

பிரபல நடிகர் சிவாஜிகணேசன் இவரது தனித்துவமான நடிப்பை மக்களால் எப்போதும் மறக்க முடியாது, அந்தளவிற்கு அவரது நடிப்பு மக்களோடு ஒன்றிபோய்விட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணம் அடைந்தார். அவருக்கு  பிரபு, ராம்குமார் என இரு மகன்களும்; சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். சிவாஜி கணேசன் மறைவிற்கு பிறகு 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

டெங்கு - சிக்குன்குனியாவை தடுக்கும் புதிய கொசு...! புதுச்சேரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தல்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை

பிரபு சொத்துக்களை ஏமாற்றிவிட்டார்

மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாகவும், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பிரபல நடிகர் சிவாஜி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

மாட்டுக்கறி உணவு புகைப்படம் பதிவிடக்கூடாதா..? எச்சரிக்கை விடுத்த சென்னை காவல்துறை நடவடிக்கையால் சர்ச்சை

 

PREV
click me!

Recommended Stories

செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live today 10 December 2025: ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!