Udhayanidhi Stalin: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? உதயநிதிக்கு புரமோஷனா?

Published : Jul 17, 2024, 07:11 PM IST
Udhayanidhi Stalin: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? உதயநிதிக்கு புரமோஷனா?

சுருக்கம்

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதத்தில் அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்படி செல்லும் பட்சத்தில் அவருக்கு அடுத்தப்படியாக ஆட்சியை வழிநடத்தும் பொறுப்பை பிற நபர்களிடம் வழங்குவதற்கு பதிலாக கட்சியிலும், ஆட்சியிலும் சுறுசுறுப்பாக செயல்படும் அமைச்சர் உதயநிதியிடம் வழங்கலாம் என்று சில மூத்த நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.

மேலும் மூத்த அமைச்சர்கள் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனித்து வருவதால் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால் குறிப்பிட்ட துறைகளில் கவனச்சிதறல் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய துறைகளை கவனித்து வரும் மூத்த அமைச்சர்களிடம் இருந்து துறைகள் பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 

விமான நிலையத்தில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த முதியவர்; மெர்சல் விஜய் பாணியில் மாஸ் காட்டிய பெண் மருத்துவர்

முன்னதாக தமிழகத்தில் ஐஏஎஸ் உள்பட 65 முக்கிய அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மின்சாரம் மற்றும் நிதித்துறையை கவனித்து வரும் தங்கம் தென்னரசுவிடம் இருந்து நிதித்துறை பெறப்பட்டு மீண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

திட்டத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு; தமிழகத்திற்கான ரூ.2 ஆயிரம் கோடியை நிறுத்திய மத்திய அரசு

மேலும் கட்சியிலும் ஆட்சியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைக்கின்றனர். அந்த வகையில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்னதாகவே உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் ஆக்கப்படலாம் என்று நிலை ஏற்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!