ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பின்னணியில் இருப்பது யார்? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

By vinoth kumar  |  First Published Jul 17, 2024, 3:06 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அடப்பாவி! அக்காவை நிச்சயம் பண்ணிட்டு! மச்சினிச்சியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்!

கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 19ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியது மட்டுமல்லாமல் முதல் வெட்டு வெட்டிய  திருவேங்கடம் என்பது தெரியவந்தது. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை  அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:  இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க! தலைநகரை அலறவிட்ட சிறுவர்கள்! சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்!

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின் போது இவர்களை ஏவியது யார்? என்ற தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!