மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ ஸ்கூல்ஸ் என்ற திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாநில அரசு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்கிவிட்டதாக கூறிவருகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் குதித்த பெண்கள்; திகைத்து நின்ற அதிகாரிகள்
இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழக்கப்பட வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் பி.எம்.ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை தமிழத்தில் அமல்படுத்த மாநில அரசு சம்மதம் தெரிவிக்காத நிலையில் ஒருங்கிணைந்த பள்ளக்கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரையிலான நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடப்பாவி! அக்காவை நிச்சயம் பண்ணிட்டு! மச்சினிச்சியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்!
பி.எம்.ஸ்ரீ ஸ்கூல் திட்டம்
இத்திட்டத்தின் படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளியில் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும். மேலும் தேர்வு செய்யப்படும் பள்ளிகள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 5 ஆண்டுகளுக்கு மேம்படுத்தப்படும். 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் அப்பள்ளி மாநில அரசின் அதிகாரத்திற்கே சென்றுவிடும் என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ரூ.2 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் பள்ளக்கல்வி துறையில் நிதிச்சுமை ஏற்பட்டு பல திட்டங்கள் முடங்கும் நிலை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.