அடப்பாவி! அக்காவை நிச்சயம் பண்ணிட்டு! மச்சினிச்சியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்!

By vinoth kumar  |  First Published Jul 17, 2024, 1:23 PM IST

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகள் திடீரென மாயமானதால் அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 


அக்காவை நிச்சயம் செய்துவிட்டு மச்சினிச்சியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மகள் திடீரென மாயமானதால் அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியின் அக்காவை நிச்சயம் செய்த ஐஸ்அவுஸ் பி.எம்.தர்கா 2வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (எ) திக்குவாய் மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தெரியவந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: சிறுமிகளை மாறி மாறி சீரழித்த 15 பேர்! கோர்ட் வழங்கிய மறக்க முடியாத தண்டனை என்ன தெரியுமா? கதறிய குடும்பத்தினர்!

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் செங்கல்பட்டு அருகே சிறுமியுடன் தங்கி இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்தனர். பிறகு சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தன்னை மிரட்டி இருசக்கர வாகனத்தில் நொச்சிக்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர், ஆட்டோவில் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்று, அங்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கதறிய படி சிறுமி கூறினாள். இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் இந்த வழக்கை, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

இதையும் படிங்க:  இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க! தலைநகரை அலறவிட்ட சிறுவர்கள்! சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்!

இதனையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ரவுடி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். ராயப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அக்காவை நிச்சயம் செய்துவிட்டு, அவரது 13 வயது தங்கையை  பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

click me!