அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சவுக்கு சங்கரிடம் முன்பு பேசிய ஆடியோவை போலீசார் சோதனை போது கைப்பற்றியதாகவும், அந்த ஆடியோ தற்போது முதலமைச்சரின் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிற்கு எதிராக சவுக்கு சங்கர்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக யுடியூப்பர் சவுக்கு சங்கர் தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்து வந்தார். திமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல். அமைச்சரவைக்குள் நடக்கும் வாக்குவாதம், முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக தனது youtube இல் பேசி வந்தார்.
இதன் காரணமாக திமுகவிற்குள் யார் தகவலை சவுக்கு சங்கருக்கு கொடுக்கிறார்கள். யார் அந்த கருப்பு ஆடு என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக யாரையும் நம்ப முடியாத சூழல் உருவானத்.. சவுக்கு சங்கரின் இந்த பேச்சால் திமுகவிற்கு எதிராக கெட்ட பெயர் உருவாகத் தொடங்கியது. இந்த நிலையில் தான் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு குண்ட சட்டத்தில் அடைக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
சவுக்கு சங்கர் - வீடு, அலுவலங்களில் சோதனை
கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வழக்கு தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பல முக்கிய ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்தது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணம் கைமாறியதும் பெரிய அளவிலான வீடு வாங்கியதும் தகவலாக வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் காவல்துறை எஸ்பி லாவண்யா என்பவருடன் பேசிய ஆடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் காவல்துறையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அந்த பெண் எஸ் பி சவுக்கு சங்கரிடம் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் சவுக்கு சங்கருடன் தற்போதைய திமுக அமைச்சர்கள் பேசிய ஆடியோ ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக அமைச்சர் சவுக்பு சங்கரிடம்பேசும. ஆடியோ ஒட்று காவல்துறை மூலம் முதல்வரிடம் ஒப்படைக்கபட டது.அதுவரை கட்சி பஞ்சாயத்துகளை கவனித்து வந்த அமைச்சர் அவர்.2026 தேர்தலை திட்டமிடும் குழுவில் அவருடன் உதயநிதியை சேர்த்து விட்டார் முதல்வர்.அவர் கே என் நேரு அடுத்து அவரது துறை உதயநிதி வசம்!
— Damodharan Prakash (@sathrak1967)
முதலமைச்சர் கையில் ஆடியோ.?
சவுக்கு சங்கரின் மொபைல் போனை போலீசார் சோதனை செய்தபோது இந்த ஆடியோ கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த ஆடியோவை முதலமைச்சர் ஸ்டாலினிடம் போலீஸ் தரப்பினர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்று ம திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சவுக்கு சங்கரிடம் பேசிய ஆடியோவும் முதலமைச்சர் கைவசம் சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே வரும் நாட்களில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது.