Temple : இந்தாண்டு மீண்டும் ஒரு அரசியல் தலைவர் பலியாவர்.! சாமியார் சொன்ன அருள்வாக்கால் அச்சத்தில் தொண்டர்கள்

By Ajmal Khan  |  First Published Jul 23, 2024, 11:12 AM IST

கடந்த ஆண்டு தான் சொன்னது போல் அரசியல் தலைவர் உயிரிழந்துள்ளார். வரும் ஆண்டிலும் ஒரு அரசியல் தலைவர் பலியாவார் என புதுக்கோட்டை கருப்பசாமி பூசாரி அருள்வாக்கு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


சாமியாரின் அருள்வாக்கு

சாமியாரின் சாமியார்கள் கோயில் திருவிழாக்களில் அருள்வாக்கு கூறுவார்கள் இதில் பெரும்பாலான அருள்வாக்கு பலிக்கும். எனவே தங்களது குடும்ப கஷ்டங்கள் தீருமா.? தங்கள் பெண் குழந்தைக்கு திருமணம் நடைபெறுமா.? புதிதாக வீடு கட்ட முடியுமா.? என பக்தர்கள் கேட்பார்கள் சாமியார்களும் தங்களது அருள்வாக்கு மூலம் என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனை தீரும்,

Tap to resize

Latest Videos

எந்த கோயிலுக்கு சென்றால் திருமணம் கைகூடும் என கூறுவார்கள். அந்த வகையில் ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ளவர்கள் கோயிலுக்கு சென்ற தங்களது பிரச்சனைக்கு தீர்வு காணுவார்கள்.இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வழிபடும் கருப்பசாமி கோயில் பூசாரி கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை அருள்வாக்காக கூறினார். 

ஆடி பெளர்ணமி- விழா கொண்டாட்டம்

அப்போது தமிழகத்தில் அரசியல் தலைவர் ஒருவர் பலியாவார் என் தெரிவித்திருந்தார். அதே போன்று தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆடி பெளர்ணமியை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வழிபடும் கருப்பசாமி கோயிலில் சிறப்பு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்தை  சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து நேர்த்திக்கடனோடு கோயிலுக்கு வந்தனர். இந்த கோயில் திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தோடு வான வேடிக்கை நிகழ்வுகள் நடைபெற்றது. இதனையடுத்து கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலின் முக்கிய நிகழ்வாக  கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சாமியாரின் அருள்வாக்கு

இந்த நிகழ்ச்சியில் இந்த கோயிலின் பூசாரி மாதவன் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும்  நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று நல்வாக்கு சொல்லத் தொடங்கினார். நாட்டில் இந்த ஆண்டு வைரஸ் காய்ச்சல் பரவும், தங்கம் விலை குறையும், பல்வேறு பிரச்சனைகளால் ஒரு அரசியல் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படும்,

இந்தாண்டு மழை குறைவாக பெய்யும், இடியுடன் காற்று அதிகமாக இருக்கும் என தெரிவித்தார். அடுத்ததாக கடந்த ஆண்டு நான் சென்னதை போல் ஒரு அரசியல் தலைவர் உயிர் பலி ஏற்பட்டது. அதே போல இந்தாண்டும் மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒரு உயிர் சேதம் ஏற்படும் என கூறினார். சாமியாரின் இந்த  அருள்வாக்கால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Aadi Krithigai Viratham 2024 : வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுக்கும் ஆடி கிருத்திகை விரதம்!

click me!